தீபாவளியை முன்னிட்டு படகு குழாம் மூடல்
அரியாங்குப்பம்: தீபாவளியையொட்டி, நோணாங்குப்பம் படகு குழாம் நேற்று விடுமுறை விடப்பட்டது.கடலுார் சாலை, நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும். வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், 12 லட்சம் முதல், 15 லட்சம் வரை, சுற்றுலா பயணிகள் மூலம், புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு வருமானம் கிடைத்தது.இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி, படகு குழாம் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. படகு குழாம் வெளிப்புற கேட் மூடியிருந்ததால், உள்ளூர் மற்றும் வெளியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.