உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தென்னை வளர்ப்பு செயல் விளக்கம்

தென்னை வளர்ப்பு செயல் விளக்கம்

புதுச்சேரி: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கான தென்னை வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.புதுச்சேரி, மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் செல்லிப்பட்டு ஊரக வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கல்லுாரி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட அலுவலர் மோகன் வழிகாட்டுதலின்படி, விவசாயிகளுக்கான தென்னை வளர்ப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.அதில், செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரதாப் என்பவரது விவசாய நிலத்தில் மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைப்படி நெட்டை ரக தென்னை கன்றுகளை 7.5 மீட்டர் இடைவெளியில் நட்டு, பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை