உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  உணவு தயாரிப்பு கூடத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

 உணவு தயாரிப்பு கூடத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் மழையால் பாதுகாப்பு முகாமில் உள்ள மக்களுக்கு வழங்கும் உணவுகளை தயார் செய்யும் கூடத்தை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று பார்வையிட்டார். டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால், , தாழ்வான பகுதிகளில் வசித்த 400க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள அரசு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பாதித்துள்ள 80 ஆயிரம் பேருக்கு பேரிடர் மேலாண்மை துறை மூலம் காலையில் இட்லி மற்றும் வடை, மதியம் சம்பார் சாதம், மாலை பால், பிரெட், இரவு இட்லி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகள், முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, ஒவ்வொரு கொம்யூன்களுக்கும் வேன்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த உணவுகள் தயாரிக்கப்படும் லாஸ்பேட்டை அக்ஷய பாத்திரா உணவு கூடத்தை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று பார்வையிட்டு, உணவின் தரத்தை சோதித்து பார்த்தார். பின்னர், முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உத்தரவிட்டார். தொ டர்ந்து, லாஸ்பேட்டை தனியார் பள்ளி முகாமில் தங்கியிருந்தவர்களை சந்தித்து குறைகளே கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்