உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊசுடு ஏரி இரண்டாம் முறையாக திறப்பு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு

ஊசுடு ஏரி இரண்டாம் முறையாக திறப்பு பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு

வில்லியனுார்: ஊசுடு ஏரி மூன்றாண்டிற்கு பிறகு இரண்டாம் முறையாக நிரம்பியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி உபரி நீர் பத்துக்கண்ணு மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.மாநிலத்தின் பெரிய ஏரியான ஊசுடு ஏரி கடந்த 2021ம் ஆண்டு மொத்த கொள்ளளவான ௫௪௦ மில்லியன் கன அடி நிரம்பியது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தினால், ஏரி நிரம்பவில்லை.இந்நிலையில் கடந்த வாரம் வீசிய பெஞ்சல் புயல் அதனை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஊசுடு ஏரி கடந்த 4ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து ஏரிக்கு நீர் வந்து கொண்டிருந்ததால், ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் கடந்த 5ம் தேதி காலை அமைச்சர் சாய்சரவணன்குமார் தலைமையில் பத்துக்கண்ணு போக்கு வாய்க்கால் மூலம் சங்கராபரணி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் பெய்து வரும் மழை காரணமாக ஏரி நேற்று முன்தினம் இரவு மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. அதனையொட்டி, ஏரி பாதுகாப்பு கருதி பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் லுாயிபிரகாசம் மேற்பார்வையில் இளநிலைப் பொறியாளர்கள் கணேசன் மற்றும் பாரதி முன்னிலையில் ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பத்துக்கண்ணு போக்குவாய்க்கால் மதகு திறக்கப்பட்டு சங்கராபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.ஏரி நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதையொட்டி, கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை, ஊசுடு ஏரியை பார்வையிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை