உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுனாமி குடியிருப்பில் கலெக்டர் ஆய்வு 

சுனாமி குடியிருப்பில் கலெக்டர் ஆய்வு 

புதுச்சேரி : காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதிக்கு வரும் குடிநீரை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் குடிநீரில் மாசு கலந்து வருவதாக கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதையடுத்து கலெக்டர் குலோத்துங்கன் நேற்று காலை அப்பகுதிக்கு சென்று, குடிநீரை ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள பம்ப் ஹவுஸ் நீர்தேக்கத் தொட்டிகளை ஆய்வு செய்தார். பின் குடிநீரை ஆய்வு செய்ய, உழவர்கரை நகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து சுனாமி குடியிருப்பில் உள்ள குடிநீர் பைப்புகளை மாற்றித் தர அறிவுறுத்தினார். ஆய்வின்போது, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் உமாபதி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை