உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு

பாகூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு

பாகூர்:பாகூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமினை, கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில்2025 - 26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக, குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ் வேண்டி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் விண்ணப்பித்து வருகின்றனர். சான்றிதழ்கள் பெறும் போது ஏற்படும் சிரமங்களை தவிற்கும் வகையில், அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும் என, கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்திருந்தார்.அதன்படி,நேற்று இரண்டாவது வாரமாக அனைத்து தாலுகா அலுவலங்களிலும் சான்றிதழ் வழங்கும் முகாம் நடந்தது. இம்முகாமினை, கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார். பாகூர் தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள் மற்றும் பாகூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சான்றிதழ் வேண்டிய வரும் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா, சான்றிதழுற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர், எவ்வளவு பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களைதாசில்தார் கோபாலகிருஷ்ணணிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை