உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா கடத்தி வந்த கல்லுாரி மாணவர் கைது

புதுச்சேரி: காலாப்பட்டில் பைக்கில் கஞ்சா கடத்திய கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்து, 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி, இ.சி.ஆர்., பிள்ளைச்சாவடி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அருகே காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரி, வில்லியனுார் பகுதியை சேர்ந்த லோகேஷ்வரன்,22; என்பதும், தனியார் கல்லுாரியில் எம்.பி.ஏ., படித்து வருவதும் தெரியவந்தது.போலீசார் வழக்குப் பதிந்து லோகேஷ்வரனை கைது செய்து, அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ