மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
21-May-2026
மொபட் மாயம்
30-Apr-2026
புதுச்சேரி: மொபைல் போனில் மூழ்கி இருந்ததை தந்தை கண்டித்ததால் கல்லுாரி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி, வம்பாகீரப் பாளையம், முத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், மீனவர். இவரது மகள் தனுஜா, 18; பாக்கமுடையான்பேட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு தனுஜா மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். அதனை அவரது தந்தை ஆறுமுகம் கண்டித்தார். இதனால், மன முடைந்த தனுஜா வீட்டின் அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21-May-2026
30-Apr-2026