உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவி தற்கொலை

கல்லுாரி மாணவி தற்கொலை

காரைக்கால் : காரைக்காலில் கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால், வயல்கரை வீதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி மனைவி காயத்திரி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணேசமூர்த்தி இறந்த நிலையில் காயத்திரி மகள்களை படிக்க வைத்தார். முத்த மகள் கார்த்திகா, 19, பஜன்கோ அரசுக் கல்லுாரியில் சேர்ந்து பி.எஸ்.சி., படித்து வருகிறார்.இவர் கல்லுாரி சேர்ந்த நாள் முதல் பாடம் கடினமாக இருப்பதாக காயத்திரியிடம் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திகா நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !