உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

காரைக்கால்: காரைக்கால், பொலிகான் வீதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்; பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர். இவரது மகள் ரம்யா, 19; அரசு மகளிர் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். கடந்த 8ம் தேதி வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்ற ரம்யா, மாலை வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ரம்யாவின் தோழியிடம் பெற்றோர் விசாரித்தபோது வயிற்றுவலி காரணமாக வீட்டுக்கு செல்வதாக கூறி ரம்யா வெளியே சென்றது தெரியவந்தது. சுப்ரமணியன் புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து ரம்யாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !