உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

புதுச்சேரி, : கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.உறுவையாறு புது நகர் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹேமமாலினி 17, பத்துக்கண்ணு கிறிஸ்ட் பொறியியல் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. இவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுதா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை