| ADDED : நவ 22, 2025 05:37 AM
புதுச்சேரி: கோஜூ காய் கராத்தே பள்ளி தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது. கோஜூ காய் கராத்தே பள்ளி தலைவரும், சிவாலயா பிரிண்டர்ஸ், சன் லேபில் மற்றும் சுப்ரீம் பேக்கேஜ் குழும நிர்வாக இயக்குனருமான சிவப்பிரகாசம் தொழில்சார்ந்த பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றார். பத்து நாள் பயணத்தை முடித்து கொண்டு புதுச்சேரி திரும்பிய அவருக்கு, காரத்தே பள்ளி சார்பில், பாராட்டு விழா நடந்தது. ஜெயராம் ஓட்டல் வளாகத்தில் உள்ள கராத்தே பள்ளியில் நடந்த விழாவிற்கு, சர்வதேச நடுவரும், மூத்த கராத்தே நிபுணருமான ஜோதிமணி தலைமை தாங்கி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் கராத்தே பள்ளி துணைத் தலைவர் மதன்குமார் முன்னிலை வகித்தார். கோஜூரியோ கராத்தே சங்க பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன், சென்சாய்கள் கண்ணன், ஜவஹர், முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் கராத்தே மாணவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.