உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை

 பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை

அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கவில்லை எனில், உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் எச்சரித்துள்ளார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் (பொறுப்பு) நாகராஜன் செய்திக்குறிப்பு; அரியாங்குப்பம் நகர் மற்றும் சாலைகளில் பன்றிகள் சுற்றித்திரிந்து வருகிறது. அதே போன்று, தவளக்குப்பம் தனியார் கண் மருத்துவமனை பின்புறம் உள்ள நகர் பகுதிகளில் பன்றிகள் வயல்வெளியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. சுகாதார பிரச்னை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும், பன்றிகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து செல்ல வேண்டும். இல்லை எனில், கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பன்றிகளை பிடித்து, அபராதம் விதிக்கப்படும். மேலும் பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை