புகார்
பகலில் எரியும் மின் விளக்குஅரியாங்குப்பம் காக்காயந்தோப்பு பகுதியில் அரிக்கன்மேடு வீதி, விருமன் கோவில் வீதியில் உள்ள தெரு மின் விளக்குகள், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகலிலும் தொடர்ந்து எரிவதால் மின்சாரம் விரையமாகி வருகிறது.வாழுமுனி, காக்காயந்தோப்பு.விபத்து அபாயம்பாகூர் தீயனைப்பு நிலையம் அருகே உள்ள சாலை வளைவில் ஜல்லிகள் பெயர்ந்து சிதறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.மூர்த்தி, பாகூர்.வாய்க்காலில் அடைப்புசாரம், தென்றல் நகர், 2வது குறுக்கு தெருவில், வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.மதி, சாரம். நாய்கள் தொல்லைஊசுடு பகுதி, ரெட்டியார் தெருவில் நாய்கள் தொல்லையால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.மகாலட்சுமி, ஊசுடு. சுகாதார சீர்கேடுஎல்லைப்பிள்ளைச்சாவடி, தந்தை பெரியார் நகர், 4வது, குறுக்கு தெருவில், குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.உமா, எல்லைப்பிள்ளைச்சாவடி.அபிேஷகப்பாக்கம் - டி.என்., பாளையம் செல்லும் சாலையில் குப்பைகள் தேங்கி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.கவிதா, டி.என்., பாளையம். வாகன ஓட்டிகள் அவதிஅரியாங்குப்பம், சொர்ணா நகர் சாலை குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.பாரதிபிரியன், அரியாங்குப்பம்.தெரு விளக்கு எரியுமா?காலாப்பட்டு கணபதி செட்டிக்குளம், புதுநகரில், தெருவிளக்கு எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.சுப்ரமணியன், காலாப்பட்டு. கூடுதல் போலீஸ் தேவைவில்லியனுார் பைபாஸ் சாலை சந்திப்பில், விபத்து நடப்பதால், கூடுதலாக போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும். ரஜினிமுருகன், வில்லியனுார்.