உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதாரத்துறை சர்வீஸ் பிளேஸ்மெண்ட் பாரபட்ச நடவடிக்கை என புலம்பல்

சுகாதாரத்துறை சர்வீஸ் பிளேஸ்மெண்ட் பாரபட்ச நடவடிக்கை என புலம்பல்

பள்ளி கல்வித்துறையை சேர்ந்த 54 ஆசிரியர்கள் முதல்வர், அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்களை கல்வி பணிக்கு திருப்பி அனுப்ப பொதுநல அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.ஆசிரியர்கள் முதல்வர், அமைச்சர்கள் அலுவலகத்தில் என்ன கற்று கொள்ள பணியில் உள்ளனர் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கல்வி சாரா பணியில் உள்ள ஆசிரியர்கள் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இதன் எதிரொலியாக எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு மூலம் சர்வீஸ் பிளேஸ்மென்டில் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த 35 செவிலியர் அதிகாரிகள் தங்களின் நியமன இடத்திற்கு திரும்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டது.இதனை வரவேற்றுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள், அரசியல் பிரமுகர்களின் சிபாரிசு மூலம் பல செவிலியர் அதிகாரிகள், கிராமப்புற செவிலியர், மருந்தாளுநர் என மருத்துவ பணியாளர்கள் சர்வீஸ் பிளேஸ்மெண்டில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பணியாற்றாமல், வீட்டின் அருகிலேயே பணியாற்றி வருவதாக புலம்புகின்றனர்.மருத்துவத்துறை தனி அதிகாரி பணி மாறுதல் ஆணை பிறப்பித்தால், அதே அதிகாரி சர்வீஸ் பிளேஸ்மெண்ட் உத்தரவு பிறப்பிப்பதும், தனி அதிகாரி வெளியிட்ட உத்தரவை சுகாதாரத்துறை இயக்குநர் சிபாரிசு மூலம் வேறு ஒரு உத்தரவு பிறப்பிப்பது என, சுகாதாரத்துறையில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்து வருகிறது.இதனால் சுகாதாரத்துறையில் இருந்து சர்வீஸ் பிளேஸ்மெண்ட் சென்ற ஒட்டுமொத்த ஊழியர்களின் பட்டியலை கவர்னர் பார்வையிட்டு சுகாதார பணியாளர்கள் சுகாதார பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுகாதார ஊழியர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை