உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குண்டும் குழியுமான சாலை

புதுப்பேட்டை புதுத் தெருவில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஞானபிகாசம், புதுப்பேட்டை.

நாய்கள் தொல்லை

அரியாங்குப்பம் மாதா கோவில் தெருவில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால், நடந்து செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.பாபு, அரியாங்குப்பம்.

ஓடையில் வாய்க்கால் கட்டப்படுமா

தருமாபுரி, அகத்தியர் கோட்டம் ஓடையில், வாய்க்கால் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாகராஜன், அகத்தியர் கோட்டம்.

விளக்கு எரியவில்லை

கொம்பாக்கம் சோனியாகாந்தி நகரில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.சிவசங்கர், கொம்பாக்கம்.

புதர்மண்டிய மனையால் அச்சம்

ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்ஷினி வீதியில், காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் நடமாட்டம் இருந்து வருகிறது.தினேஷ், ஜீவானந்தபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை