புகார் பெட்டி
துார் வார வேண்டும்
மழை காலம் வருவதால், தண்ணீர் தேங்காமல் இருக்க வேல்ராம்பட்டு கமலம், வீதி வாய்க்காலை துார் வர வேண்டும்.ஸ்ரீதரன், வேல்ராம்பட்டு. சுகாதாரசீர்கேடு
ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர், 2வது குறுக்கு தெருவில், இடிந்த கட்டடத்தில் குப்பைகளை கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.அஜித், ரெட்டியார்பாளையம். சாலையில் கழிவுநீர்
கோரிமேடு, இஸ்ரவேல் நகரில், கழிவுநீர் செல்லும் வாய்க்கால் இல்லாததால், சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.மில்டன், கோரிமேடு.தெரு விளக்கு எரியுமா?சாரம் சத்யா நகர், 5வது குறுக்கு தெருவில், பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.காயத்ரி, சாரம். வாகன ஓட்டிகள் அவதி
மூலக்குளம் வெரோனர் நகரில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கமல்ராஜ், மூலக்குளம்.