மேலும் செய்திகள்
புகார் பெட்டி
18-Oct-2024
அரியாங்குப்பத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். கதிரேசன், அரியாங்குப்பம். போக்குவரத்து நெரிசல்
லாஸ்பேட்டைக்கு செல்லும் பொதுமக்கள், தட்டாஞ்சாவடிதொழிற்பேட்டை வழியாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதி, தட்டாஞ்சாவடி. சிமென்ட் சிலாப் சேதம்
லாஸ்பேட்டை ,ராஜாஜி நகர், 6வது குறுக்கு தெருவில், கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சிமென்ட் சிலாப் உடைந்து இருப்பதால், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கதிரவன், லாஸ்பேட்டை. பயணியர் நிழற்குடை தேவை
புதுச்சேரியில் இருந்து முள்ளோடை வரை உள்ள முக்கிய இடங்களில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். சங்கர், பிள்ளையார்குப்பம். ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
வில்லியனுார், மூர்த்தி நகர் எதிரில், ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ஆறுமுகம், வில்லியனுார்.நாய்கள் தொல்லைமூலக்குளம், மோதிலால் நகர், 3வது குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். முருகன், மூலக்குளம்.தெரு விளக்கு எரியவில்லைநைனார்மண்டபம் சுகாதார ஊழியர் குடியிருப்பு பகுதியில் சில வீதிகளிலும், ரயில்வே மேம்பாலத்திலும் தெருவிளக்கு எரியவில்லை. வேலன், நைனார்மண்டபம்.
18-Oct-2024