உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

ஜல்லிகள் அகற்றப்படுமா?

லாஸ்பேட்டை, குமரன் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், கழிவுநீர் வாய்க்கால் கட்டு பணி முடிந்த நிலையில், அதற்காக கொட்டப்பட்ட ஜல்லிகள் அப்புறப்படுத்தாமல் பல மாதங்களாக அங்கேயே கிடக்கிறது. பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை.

மின் விளக்கு தேவை

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே மின் விளக்குகள் இல்லாமல், இரவு நேரங்களில் அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடந்து வருகிறது.மகேஷ், தவளக்குப்பம்.

சாலையில் கழிவுநீர் தேக்கம்

புதுசாரம், தென்றல் நகர், இரண்டாவது குறுக்கு தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மதி, புதுசாரம். பிள்ளைத்தோட்டம், கங்கை அம்மன் கோவில் தெருவில், நாய்கள் அட்டகாசம் செய்து வருவதால், குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ராணி, பிள்ளைத்தோட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ