உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

ஆக்கிரமிப்பால் பாதிப்பு

பாக்கமுடையான்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கதிரவன், பாக்கமுடையான்பட்டு.

குண்டும் குழியுமான சாலை

மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.சரவணன், மணவெளி.

சுகாதார சீர்கேடு

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் சாலையில் குப்பைகளை கொட்டி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ரவிச்சந்திரன், தவளக்குப்பம்.

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை

தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.மீனாட்சி, தவளக்குப்பம்.

பயணிகள் நிழற்குடை தேவை

ரெட்டியார்பாளையத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் வெயிலில் நின்று அவதியடைந்து வருகின்றனர்.கண்ணன், ரெட்டியார்பாளையம்.

போக்குவரத்திற்கு இடையூறு

மேரி உழவர்கரை, சக்தி நகர் பம்ப் ஹவுஸ் சாலையில், இரண்டு மின் கம்பங்களால், போக்குவரத்து இடையூறாக உள்ளது. ரவி, உழவர்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை