புகார் பெட்டி
கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு
சாரம் தென்றல் நகர் 2வது குறுக்கு தெருவில், வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மகேஷ், சாரம். நாய்கள் தொல்லை
உசுடு பகுதி ரெட்டியார் தெருவில் நாய்கள் தொல்லையால், பொதுமக்கள் அச்சமடைந்துவருகின்றனர்.லட்சுமி, உசுடு.காரமணிக்குப்பம் பகுதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ரவிச்சந்திரன், காரமணிக்குப்பம். சுகாதார சீர்கேடு
எல்லைப்பிள்ளைச்சாவடி தந்தை பெரியார் நகர், 4வது, குறுக்கு தெருவில், குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.மாரியப்பன், எல்லைப்பிள்ளைச்சாவடி. மழைநீர் தேக்கம்
தவளக்குப்பம் நல்லவாடு சாலையில் மழைநீர் செல்ல முடியாமல், தேங்கி நிற்கிறது.சங்கர், தவளக்குப்பம். ைஹமாஸ் எரியுமா?
மணவெளி தொகுதி அபிேஷகப்பாக்கம் சாலையில், தெப்பக்குளம் அருகே பல மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், அப்பகுதி இருண்டு கிடக்கிறது.கணபதி, மணவெளி. சாலை ஆக்கிரமிப்பு
கோர்க்காடு படையாட்சி வீதியில் முதல் சுடுகாடு வரை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.முருகன், கோர்க்காடு.கடலுார் சாலை முள்ளோடையில் சாலையோரம் தள்ளு வண்டி கடைகள் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.ஆனந்த், முள்ளோடை. தெரு விளக்கு எரியவில்லை
நைனார்மண்டபம், திவான் கந்தப்பா நகர், கட்டபொம்மன் வீதியில் சில நாட்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளதால், அப்பகுதி இருண்டு காணப்படுகிறது.குமரன், புதுச்சேரி.