புகார் பெட்டி
நாய்கள் தொல்லை
நுாறடி சாலை, ஜெயம் நகர், மணக்குள விநாயகர் வீதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.பாலமுருகன், புதுச்சேரி. மின் விபத்து அபாயம்
லாஸ்பேட்டை, அவ்வை நகர், 2வது மெயின் ரோடு வழியாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பியின் மீது மரக்கிளைகள் உரசி செல்வதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தீனதயாளன், புதுச்சேரி. வாகன ஓட்டிகள் அவதி
முதலியார்பேட்டை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கதிரவன், முதலியார்பேட்டை. போக்குவரத்து நெரிசல்
அண்ணா சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.மதியழகன், அண்ணாசலை. தெரு விளக்கு எரியவில்லை
நைனார்மண்டபம், திவான் கந்தப்பா நகரின் சில வீதிகளில் தெரு விளக்கு எரியாமலும், சில இடங்களில் விட்டு விட்டு எரிகிறது. கதிர், நைனார்மண்டபம்.