| ADDED : நவ 17, 2025 02:48 AM
குப்பை வண்டி வரவில்லை ராஜ்பவன் பகுதியில் குப்பை வண்டி, சரியாக வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. பால லட்சுமி, ராஜ்பவன். தெரு நாய்கள் தொல்லை காமராஜர் நகர் தொகுதி, வெங்கட்டா நகரில்,தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பிரசாந்த், வெங்கட்டா நகர். மூலகுளம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., நகர். சாலை வசதி தேவை தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில், சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வடிவேலன், ஸ்ரீ அரவிந்தர் நகர். ஆக்கிரமிப்பால் நெரிசல் ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பஸ் நிறுத்தம் அருகில் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ராஜ்குமார், ரெட்டியார்பாளையம். சாலையில் பேனர்கள் கடலுார் சாலையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து இடையூறுஏற்பட்டு வருகிறது. செல்வம், புதுச்சேரி.