உள்ளூர் செய்திகள்

 புகார் பெட்டி

தெரு நாய்களால் ஆபத்து நைனார்மண்டபம், ரமணர் வீதியில் தெருநாய்கள் வாகனத்தில் செல்வோரை துரத்துவதால் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஜானகிராமன், நைனார்மண்டபம். கடலுார் சாலை மோசம் கடலுார் சாலை, அரியாங்குப்பம் முதல் கன்னியகோவில் வரை சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவக்குமார், பூரணாங்குப்பம். காலி மனையில் மழைநீர் வில்லியனுார், திரிவேணி நகரில், காலி மனையில் மழைநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. சந்திரசேகர், வில்லியனுார். குண்டும் குழியுமான சாலை சிவாஜி சிலை அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அருள், புதுச்சேரி. தெரு விளக்கு எரியுமா? ரெட்டியார்பாளையம் - மூலக்குளம் சாலையில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. ராஜ்குமார், ரெட்டியார்பாளயைம். மழை நீர் தேங்கி மக்கள் அவதி தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் அவதிடைந்து வருகின்றனர். பாஸ்கர், தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை