உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புகார் பெட்டி: போக்குவரத்திற்கு இடையூறு:

 புகார் பெட்டி: போக்குவரத்திற்கு இடையூறு:

போக்குவரத்திற்கு இடையூறு: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ராஜ், புதுச்சேரி. --------------------------------- சாலை படுமோசம்: வில்லியனுார் - கூடப்பாக்கம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நாகராஜ், வில்லியனுார். ----------------------------------- தெரு நாய்கள் தொல்லை: முதலியார்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ராணி, முருங்கப்பாக்கம். ------------------------------------------- கழிவுகளால் சுகாதார சீர்கேடு: கதிர்காமம், தட்சிணாமூர்த்தி நகர், 6 மற்றும் 7 ஆகிய தெருக்களில் உள்ள வாய்க்காலில் கழிவுகள் அ அடைத்துக்கொண்டு , துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மனோகர், புதுச்சேரி. ---------------------------------------- குண்டும் குழியுமாக சாலை: லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை. ------------------------------------- கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள்: கதிர்காமம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளது. முருகன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை