உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது

சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது

சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது: காமராஜ் நகர் தொகுதி பாலாஜி நகர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. பிரேமா, புதுச்சேரி. ------------------------------------- வாய்க்கால் துார்வார வேண்டும்: தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால், துார் வாரவேண்டும். ராஜகுமாரி, தொண்டமாநத்தம். -------------------------------------------------- ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மோகன்ராஜ், புதுச்சேரி. ----------------------------------------------- குண்டும்: மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கணபதி, புதுச்சேரி. --------------------------------------------------- தெரு விளக்கு எரியவில்லை: முத்தியால்பேட்டை கணேஷ் நகர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் உள்ளது. பரமானந்தம், முத்தியால்பேட்டை. ---------------------------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !