உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து இடையூறு

போக்குவரத்து இடையூறு

லாஸ்பேட்டைராஜாஜி நகர், 10வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் உள்ள சிமென்ட் சிலாப் சாலையில் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. துரைராஜ். லாஸ்பேட்டை. பூங்கா சீரமைக்கப்படுமா? முதலியார்பேட்டை மற்றும் நைனார்மண்டபத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும். செல்வன், முதலியார்பேட்டை. கழிவுநீர் தேங்கி நிற்கிறது அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் போஸ்ட்மேன் தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. அசோக், ஆர்.கே.நகர். வில்லியனுார், தில்லை நகர், பாரதி வீதியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சேதமடைந்து சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஹரிஷ், வில்லியனுார் . தெரு விளக்கு எரியுமா? மங்கலம் உறுவையாறு பெருமாள் சிலைமேடு பகுதியல் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. காந்தி, உறுவையாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை