உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் தேங்கி நிற்கிறது

கழிவுநீர் தேங்கி நிற்கிறது

கழிவுநீர் தேங்கி நிற்கிறது: புவன்கரே வீதி, கீரப்பாளையம் வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. கமலா, லாஸ்பேட்டை. மின் விளக்கு எரியவில்லை: நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர் முதல் மெயின் ரோட்டில் மின் விளக்கு எரியாமல் உள்ளது. செல்வன், புதுச்சேரி. குப்பை வண்டி வரவில்லை: காலாப்பட்டு, பாரதி நகர், 7வது குறுக்கு தெருவில் குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளது. கணேசன், காலாப்பட்டு. சாலை மீன் கடைகள்: உப்பளம் சாலையில் மீன் மார்க்கெட் போன்று கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ரவி, உப்பளம். நாய்கள் தொல்லை: புது சாரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். காமராஜ், புதுச்சேரி. கழிவுநீர் வாய்க்கால் தேவை: மங்கலம் உறுவையாறு, பெருமாள் சிலைமேடு பகுதியில் கழிவுநீர் சைடு வாய்க்கால் வசதி இல்லாமல் உள்ளது. புவனேஷ், உறுவையாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !