மேலும் செய்திகள்
பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு
30-Jun-2026
அரும்பார்த்தபுரம், பைபாஸ் சாலை, பாலத்தின் கீழ் கனரக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. கண்ணன், அரும்பார்த்தபுரம். மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மாதவன், மரப்பாலம்.தெரு நாய்கள் தொல்லை உழவர்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். அருண், உழவர்கரை. சாலை படுமோசம் மூலக்குளம் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கலியபெருமாள், மூலக்குளம். நகரில் ஆக்கிரமிப்பு மூலக்குளம் மோதிலால் நகரில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. சிவா, மூலக்குளம்.
30-Jun-2026