உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

அடிக்கடி மின் தடை: அரியாங்குப்பம் பகுதியில் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  முருகன், அரியாங்குப்பம்.  சாலை மோசம் மதகடிப்பட்டு – மடுகரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பெருமாள், புதுச்சேரி. தெரு நாய்கள் தொல்லை காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 9வது குறுக்கு தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். தமிழ், ரெயின்போ நகர். டவுன் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். காந்திமதி, புதுச்சேரி.  போக்குவரத்து நெரிசல் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் முக்கிய சந்திப்பு பகுதியில் போலீசார் அமர்த்தப்பட வேண்டும்.  ரவிச்சந்திரன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை