அஞ்சல் அலுவலகத்தில் 5ம் தேதி குறைகேட்பு நாள்
புதுச்சேரி: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் வரும் 5ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 5ம் தேதி காலை 11:30 மணியளவில் நடக்கும் கூட்டத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம். வரும் 4ம் தேதிக்கு முன்பு, குறைகளை, முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். மேலும் www.indiapost.gov.inஇணைய தளத்தில் அஞ்சல் குறைகேட்பு புகார் அனுப்பலாம். மேலும், 0413 2334837, 2337017, 2225373 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என, முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.