புகார் பெட்டி: புதுச்சேரி
பயணியர் நிழற்குடை தேவை தவளக்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேனகா, அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை தாகூர் கலைக் கல்லுாரி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். செல்வமூர்த்தி, குறிஞ்சி நகர். கொசு தொல்லை நெல்லித்தோப்பு, அண்ணா நகர் கிழக்கு, 6வது குறுக்கு தெருவில் காலிமனையில் புதர் மண்டி கிடப்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சாந்தி, நெல்லித்தோப்பு. போக்குவரத்து இடையூறு காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். வைரமணி, சாரம்.