மேலும் செய்திகள்
கைது செய்யும் சூழல் வந்தால் விஜயை கைது செய்வோம்: சொல்கிறார் துரைமுருகன்
43 minutes ago | 6
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
வானுார் : புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கார்கள் மீது கற்களை வீசி தாக்கி சேதப்படுத்தும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.புதுச்சேரி - திண்டிவனம் பைபாசில் இரும்பை சிவன் கோவில் அருகே சில நாட்களாக அதிகாலை 2:00 மணி முதல் 3:30 மணிவரை மர்ம நபர்கள் சாலையின் இருபுறமும் பதுங்கி நின்று, அவ்வழியே வரும் காரின் முன் கண்ணாடி மீது கற்களை வீசி சேதப்படுத்துவதாக, வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இதுகுறித்து பட்டானுார் சுங்கச் சாவடியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆரோவில் போலீசார், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு சிறையில் இருந்து வந்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.இப்பகுதியில் பெரும் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுத்திட இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
43 minutes ago | 6
4 hour(s) ago | 1