பணி நிறைவு பாராட்டு விழா
புதுச்சேரி : பொதுப்பணித்துறை சாலை மற்றும் கட்டடங்கள் மத்திய கோட்ட அலுவலக உதவி பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற பார்த்தசாரதிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்த விழாவில், செயற்பொறியாளர் சீனிவாசன், ஜே.ஏ.ஓ., கோவிந்தம்மாள், உதவி பொறியாளர் அங்கையர்கண்ணி, ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் திருஞானம் மற்றும் மத்திய கோட்டத்தில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள், ஊழியர்கள் வாழ்த்தினர்.பார்த்தசாரதி ஏற்புரை வழங்கினார்.