மேலும் செய்திகள்
தொடர் மருத்துவ கருத்தரங்கு
27-Jul-2025
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருந்தாளர் சங்கம் தலைவர் அன்புசெல்வன் பணி நிறைவு பாராட்டு விழா, அரசு மருத்துவமனை கருத்தரங்கம் வளாகத்தில் நடந்தது. சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் தலைமை தாங்கினார். மருத்தாளர் முருகையன் வரவேற்றார். விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் மேரி ஜோஸ்பின் சித்ரா, மருத்துவ கண்காணிப்பாளர் பொறுப்பு ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி, மருந்தக பொறுப்பு அதிகாரி உதயகுமார், இணை இயக்குனர் ஷமி முன்னிஷா மற்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் அன்பு செந்தில், முன்னாள் பொது செயலாளர் சேகர், சுகாதார சங்க செவிலியர் சங்க பொறுப்பாளர்கள் பாக்கியவதி, ஜானகி, சம்மேளன முன்னாள் தலைவர் கலைச்செல்வன், முன்னாள் அமைப்பு செயலர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை பிரபாத், சுரேஷ், ஜான் மெல்ட், விஜயகுமார், அப்துல்வதுாத், அன்பு செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
27-Jul-2025