உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏர் ஹாரன்கள் பறிமுதல் அபராதம் விதிப்பு

ஏர் ஹாரன்கள் பறிமுதல் அபராதம் விதிப்பு

புதுச்சேரி: பஸ், லாரிகளில் பயன்படுத்திய ஏர்ஹாரன்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால், வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கிறது. ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவதால், ஒலி மாசுபாடு ஏற்படுவதாக, டி.நகர் போலீசாருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.இதைதொடர்ந்து வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார், எல்லைப்பிள்ளைச்சாவடி சாலையில், நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது, பஸ், லாரிகளில் இருந்து ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்து, தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, அந்த வழியாக 40 கி.மீ.,க்கு மேல் அதிக வேகத்தில் வந்த வாகனங்களை நிறுத்தி, அபராதம் விதித்து, வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ