கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ.,விற்கு வாழ்த்து
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழாவில் பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் பங்கேற்று அழகானந்தம் எம்.எல்.ஏ., விற்கு வாழ்த்து தெரிவித்தார். கதிர்காமம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு அழகானந்தம் எம்.எல்.ஏ., வெற்றி பெற்றார். இவர் தொகுதியில் மக்கள் பணி செய்யும் வகையில் வழுதாவூர் சாலை மேட்டுப்பாளையத்தில் புதிதாக எம்.எல்.ஏ., அலுவலகம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் சந்திரமோகன் பங்கேற்று அழகானந்தம் எம்.எல்.ஏ., விற்கு பூங்கொத்து கொடுத்து, மக்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.