உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / துணை ராணுவத்தினருடன் காங்., வேட்பாளர் வாக்குவாதம்

துணை ராணுவத்தினருடன் காங்., வேட்பாளர் வாக்குவாதம்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஓட்டு போட சென்ற மக்களை தடுப்பதாக கூறி காங்., வேட்பாளர் விநாயகம், துணை ராணுவம் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. திலகர் நகர், மோகன் நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வி.பி.பி., நகர் மெயின் ரோடில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வாகனங்களில் சென்றனர். அவர்களை வி.பி.பி., நகர் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தடுத்து, வாகனங்களில் இவ்வழியாக செல்லக்கூடாது வேறு வழியாக செல்லுங்கள் என, கூறினர். இதையறிந்த காங்., வேட்பாளர் விநாயகம், அங்கு விரைந்து வந்து, ஆளும் கட்சிக்கு ஆதரவாக துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் செயல்பட்டு, ஓட்டு அளிக்க செல்பவர்களை தடுத்து திருப்பி விடுவதாக கூறி அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை