உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., வேட்பாளர் சிவசங்கர் தீவிர ஓட்டு சேகரிப்பு

காங்., வேட்பாளர் சிவசங்கர் தீவிர ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர், சக்தி நகர், ஓம் சக்தி நகர், மேரி உழவர்கரை மற்றும் மோதிலால் நகர் பகுதிகளில் மக்கள் நலத்திட்ட பணிகளை எடுத்து கூறி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுச்சேரி சட்டசபை தேர்தலில், உழவர்கரை தொகுதியில் காங்., சார்பில் வேட்பாளர் சிவசங்கர் போட்டியிடுகிறார். அவர், நேற்று 6வது நாளாக சக்தி நகர், ஓம் சக்தி நகர், மேரி உழவர்கரை மற்றும் மோதிலால் நகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, எம்.எல்.ஏ.,வாக கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதிகளில் மேற்கொண்ட மக்கள் நலத்திட்ட பணிகளை விளக்கி கூறியும், மீண்டும் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு 'கை' சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டு கொண்டார். அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !