உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  துப்புரவு தொழிலாளிக்கு காங்., நிர்வாகிகள் பாராட்டு

 துப்புரவு தொழிலாளிக்கு காங்., நிர்வாகிகள் பாராட்டு

புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையத்தில் குப்பை தரம் பிரிக்கும் போது கிடைத்த நகையை போலீசில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளியை காங்., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டினர். இந்திரா நகர் தொகுதி தருமாபுரி, தனக்கோடி நகர், காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஜோதி, 58; கீரின் வாரியர் நிறுவனத்தில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அய்யங்குட்டிபாளையம் ஹவுசிங்போர்ட் பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணியின் போது, ஒரு சவரன் கம்மல் கிடைத்தது. அதனை நேர்மையான முறையில் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை அறிந்த மாநில காங்., கட்சி சார்பில் சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார், துப்புரவு பணியாளரின் நேர்மையை பாராட்டி, சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.இதில், வட்டார தலைவர் சோமசுந்தரம், கோபால், சுரேஷ், ராமமூர்த்தி, சஙகர், சதீஷ், ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !