உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலை மறுமதிப்பீட்டில் தாமதம் காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் பரம்பத் குற்றச்சாட்டு

பல்கலை மறுமதிப்பீட்டில் தாமதம் காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் பரம்பத் குற்றச்சாட்டு

புதுச்சேரி: பூஜ்ய நேரத்தில் மாகே காங்., எம்.எல்.ஏ., ரமேஷ் பரம்பத் பேசியதாவது:புதுச்சோரி பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கும், சான்றிதழ் வழங்குவதற்கும் காலதாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு உயர் கல்விக்கு அட்மிஷன் கிடைப்பது கடினமாக இருக்கிறது.மறு மதிப்பிட்டிற்கான விண்ணப்பங்களில் காலதாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் மறுபடியும் தேர்வு எழுத வேண்டிய நிலைமை உள்ளது. மதிப்பெண் சான்றிதழில் நிறைய தவறுகள் வருகின்றன. ஆன்லைனில் பார்க்கும்போது பாஸ் என்று தெரியும். ஆனால் ரிசல்ட் வந்த பிறகு தோல்வி அடைந்ததாக தெரிகிறது. 2018ம் ஆண்டிற்கு பிறகு பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படவில்லை.இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், தேவையான சான்றிதழ்களை பல்கலைகலைக்கழகத்தில் குறைந்த காலத்திற்குள் சான்றிதழ் பெறுவதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !