போக்குவரத்து போலீசாரை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
வில்லியனுார்: போக்குவரத்து போலீசாரை கண்டித்து ஊசுடு தொகுதி காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊசுடேரி சாலையில் கடந்த 8ம் தேதி காலை தொண்டமாநத்தத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகள் தந்தை கண் முன்னே டிப்பர் லாரி மோதி இறந்தனர். இந்த விபத்து மற்றும் போக்குவரத்து போலீசாரை கண்டித்து ஊசுடு தொகுதி காங்., சார்பில் பத்துக்கண்ணு சந்திப்பு பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், விபத்து பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதால் தான் ஏற்பட்டது. எனவே புதுச்சேரி அரசு காலை 10:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை பத்துக்கண்ணு வழியாக கனரக வாகனங்கள் புதுச்சேரி, வில்லியனுார் பகுதிக்கு செல்ல அனுமதிக்க கூடாது. விபத்தினால் பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. முன்னதாக காங்., சார்பில் விபத்தில் இறந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.