உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூடுதல் நிவாரணம் வழங்க கவர்னரிடம் காங்., கோரிக்கை

கூடுதல் நிவாரணம் வழங்க கவர்னரிடம் காங்., கோரிக்கை

புதுச்சேரி: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என, கவர்னரிடம் காங்., சார்பில் மனு அளிக்கப்பட்டது.முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், பெத்தபெருமாள், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன் ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனை ராஜ்நிவாசில் சந்தித்து மனு அளித்தனர். அதில், புயல், கனமழையால் புதுச்சேரி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பள்ளி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர்.சிறப்பு முகாம்கள் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார்கார்டு உட்படசான்றிதழ்கள் வழங்க வேண்டும். சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டும். முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்கள் 10 நாட்களுக்கு மேலாக கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் நிவாரண உதவியை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.சேதமான விவசாய நிலங்களுக்கு எக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய், இறந்த கால்நடைகளுக்கு 50 ஆயிரம், சேதமடைந்த வீடுகளுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். மழைநீரை சேமித்து கோடை காலத்தில் குடிநீருக்கு பயன்படுத்த போதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை