கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவக்கம்
புதுச்சேரி: பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நேற்று (3ம் தேதி) துவங்கியது.புதுச்சேரி - கடலுார் சாலை புனித அந்தோணியார் மஹாலில் வரும் 5ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும் கண்காட்சி துவக்க விழாவிற்கு, ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர் அண்ணாமலை, பாண்டிச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர் சுரேஷ், செயலர் ராம்குமார், பொருளாளர் பாஸ்கர் தலைமை தாங்கினர்.முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கட்டுமான பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்து, விழா மலரை வெளிட்டார். அமைச்சர் லட்சுமிநாராயணன், புதுச்சேரி தலைமை நகர திட்டமிடல் அதிகாரி வீரசெல்வம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அனைத்து சிவில் இன்ஜினியர்களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் ராஜேஷ் தமிழரசன், முன்னாள் மாநிலத் தலைவர் தாயுமானவன், தீயணைப்பு துறை பிரிவு அலுவலர் இளங்கோ, ஜான்சன் லிப்ட்ஸ் அண்ட் எலெவடோர்ஸ் பொது மேலாளர் சிவக்குமார், கூட்டமைப்பு மண்டலம்-2 தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தனர்.விழாவில், கபூர் மார்பிள்ஸ் அண்ட் கிரானைட் பொது மேலாளர் லலித்குமார், பிரேம் ஆனந்த், தேவகி செராமிக்ஸ் சேர்மன் மோகன், சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் துணை பொது மேலாளர் பாஸ்கரன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பிரதாபன், தங்கமணிமாறன், மகாலிங்கம், சிவகாந்தன், அறிவழகன், அஜித் சந்திரன், காரிய கமிட்டி உறுப்பினர்கள் நாகராஜன், சுகுமார், முருகானந்தம், செபஸ்டின் மார்ஷியல், பாஸ்கரன், கார்த்திகேயன், பாஸ்கர் உள்ளிட்ட சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், விருத்தாச்சலம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி மண்டல சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கண்காட்சி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அண்ணாமலை, செயலாளர் பொற்செழியன், பொருளாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.