உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெரிய வாய்க்காலில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

பெரிய வாய்க்காலில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் பெரிய வாய்க்காலில் பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார். லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம், ஸ்ரீராம் நகர், ஜிப்மர் மற்றும் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பெரிய வாய்காலில் பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் ரூ. 42.94 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று (அக்.,31) நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் சிவக்கொழுந்து தலைமை தாங்கி, பாலம் அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், திருசிற்றம்பலம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வெங்கடேசன், பொதுப்பணித்துறை நீர்பாசனப் பிரிவு செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவிப் பொறியாளர் லுாயி பிரகாசம், இளநிலை பொறியாளர் தீபன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !