நல்லவாடு சா லையில் வாய்க்கால் அமைக்கும் பணி
அரியாங்குப்பம்: நல்லவாடு சாலையில் 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். மணவெளி தொகுதி, தவளக்குப்பம் - நல்லவாடு சாலையில் 3.34 கோடி மதிப்பில் 'யு' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் துவக்கி நேற்று வைத்தனர். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலைகள் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் நடராஜன், இளநிலை பொறியாளர் கார்த்திக், ஞானசேகர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.