உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிடப்பில் திருமண மண்டபம் கட்டும் பணி கிருமாம்பாக்கத்தில் அரசு நிதி வீண்

கிடப்பில் திருமண மண்டபம் கட்டும் பணி கிருமாம்பாக்கத்தில் அரசு நிதி வீண்

கிருமாம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நவீன திருமண மண்டபம் கட்டுமான பணியை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏம்பலம் தொகுதி, கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில், கடந்த காங்., ஆட்சியின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 20 கோடி ரூபாய் செலவில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன திருமண மண்டபம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக, 100க்கும் மேற்பட்ட பில்லர்களுடன் பேஸ்மெண்ட் அமைக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 2021 தேர்தலில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.அதன் பின், கிருமாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வந்த நவீன திருமண மண்டபம் கட்டும் திட்ட பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதற்காக, இதுவரை 5 கோடி ரூபாய்க்கும் மேல் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும்.காங்., தி.மு.க. கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால், நவீன திருமண மண்டபம் கட்டுமான பணி முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இதனிடையே, அஸ்திவார பில்லர் கம்பிகள் துருப்பிடித்து மக்கி வீணாகி வருகிறது. அஸ்திவார தொட்டிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி கூடமாக மாறி விட்டது. இதனால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.எனவே, கிருமாம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நவீன திருமண மண்டபம் கட்டுமான பணியை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ