உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கட்டட தொழிலாளி சாவு : போலீசார் விசாரணை

கட்டட தொழிலாளி சாவு : போலீசார் விசாரணை

புதுச்சேரி : அய்யங்குட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 48; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. ஒரு மகள் உள்ளார்.குடிப்பழக்கம் உடைய சுப்ரமணியன்,கடந்த 16ம் தேதி இரவு 7:00 மணியளவில் வீட்டின் வாசலில் தவறிவிழுந்து தலையில் காயமடைந்தார்.கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 17ம் தேதி காலை 9:30 மணிக்கு மீண்டும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சுப்ரமணியன் அழைத்து செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணியன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ