மேலும் செய்திகள்
தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
21-Sep-2024
புதுச்சேரி: தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., கட்டடக்கலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புதுச்சேரி, மிஷன் வீதி, சட்டசபை அருகே நடந்த ஆர்ப்பாட்டதிற்கு சங்க தலைவர் விஸ்வாதன், பொதுச்செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் கந்தன் தலைமை தாங்கினர். செயல் தலைவர் அபிேஷகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேது செல்வம், பொருளாளர் அந்தோணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். நல வாரியத்திற்கு உறுப்பினர்களையும், ஏ.ஐ.டி.யு.சி., சங்க பிரதிநிதியையும் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
21-Sep-2024