மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
09-Oct-2025
புதுச்சேரி: புதுச்சேரி மாநில கட்டடக் கலை ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்டசபை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலத் தலைவர் விசுவநாதன், பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினர்.ஏ.ஐ.டி.யு.சி., செயல் தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச் செயலாளர் சேது செல்வம், பொருளாளர் அந்தோணி வாழ்த்தி பேசினர். சங்க துணை தலைவர்கள் ஞானவேல், பாலன், ராஜகுமாரி, முத்துவேல், கோடீஸ்வரன், செயலாளர்கள் ராமு, அன்பழகன், பாலகிருஷ்ணன், நடராஜன், பிரபு முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு, தீபாவளி பண்டிகை உதவித் தொகையை 6,000 ரூபாயாகஉயர்த்தி வழங்க வேண்டும். கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் நல உறுப்பினர்கள் (போர்டு மெம்பர்கள்) போடப்படாமல் வாரியம் முடங்கி கிடக்கிறது. உடனடியாக போர்டு மெம்பர்களை நியமிக்க வேண்டும். நல வாரியத்தில் செயல்படுத்தாமல் உள்ள நலத் திட்டங்களை உடனடியாகசெயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
09-Oct-2025